தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அரவிந்த் சாமி நடித்த "ரெண்டகம்" படத்தை வெளியிடத்தடை! - இடைக்கால தடை

அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான "ரெண்டகம்" படத்தை இந்தியாவில் ஓடிடியில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அரவிந்த் சாமி நடித்த "ரெண்டகம்" படத்தை வெளியிட தடை
அரவிந்த் சாமி நடித்த "ரெண்டகம்" படத்தை வெளியிட தடை

By

Published : Oct 6, 2022, 6:22 PM IST

சென்னை: ஃபெலினி இயக்கத்தில் தமிழில் ரெண்டகம் என்ற பெயரிலும், மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரிலும் இயக்கப்பட்ட திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ரெண்டகம் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாக இருந்த நிலையில், அதற்கு தடைகோரி சென்னை வளசரவாக்கத்தைச்சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், இந்தப் படத்தின் கதையை ஜாவா என்ற பெயரில் இயக்குவதற்காக நடிகர் அரவிந்த் சாமியிடம் கதை சொல்லியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கதையைப்பதிவு செய்து அதற்கான காப்புரிமை பெற்ற நிலையில், இதே கதை களத்துடன் தமிழில் ரெண்டகம் என்ற படம் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று ஓடிடியில் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் கிஷோர் குமார் கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், ரெண்டகம் படத்தை ஓடிடி தளத்தில் இந்தியாவில் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா பத்து லட்சம் ரூபாயை வரும் 10ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

ABOUT THE AUTHOR

...view details