தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நீயே அரணாய் எனை ஆள... உடனிரு எந்நாளும் பாப்பி... அருண் உருக்கம்

நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த ஆண்டு கரோனாவால் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று(மே 16) தனது மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

நீயே அரணாய் எனை ஆள... உடனிரு எந்நாளும்  பாப்பி... அருண் உருக்கம்
நீயே அரணாய் எனை ஆள... உடனிரு எந்நாளும் பாப்பி... அருண் உருக்கம்

By

Published : May 16, 2022, 4:37 PM IST

தமிழ்த்திரையுலகில் 'ராஜா ராணி' படம் மூலம் அனைவருக்கும் நடிகராக அறிமுகமாகி, பின் தொடர்ந்து பல படங்களில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர் என பன்முகத்தன்மையுடன் வலம் வந்த அருண்ராஜா காமராஜ், பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'கனா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

தொடர்ந்து தற்பொழுது உதயநிதி ஸ்டாலினை வைத்து அவர் 'நெஞ்சுக்கு நீதி' என்னும் படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரின் மனைவி இறந்து ஓராண்டு ஆவதைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில், ”உடனிரு எப்போதும் உடைந்திடா உண்மையாய் உடைத்திடா மென்மையாய் .. ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ நீயே அரணாய் எனை ஆள.. உடனிரு எந்நாளும் பாப்பி”, என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மறுமணம் முடித்த டி.இமான்...! பிரபலங்கள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details