நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு சர்ச்சை உண்டு, அந்த சர்ச்சை அருண் விஜய் பதிவிட்ட ஒரு ட்வீட்-ல் இருந்து தொடங்கியது அது தற்போது வரையில் பேசப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் வெளியான போது நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், "யார் எல்லாம் மாஸ் காட்டுவது என்ற விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
அருண் விஜயின் இந்த ட்விட்டர் பதிவு சர்ச்சைகளை கிளப்பியது அன்றிலிருந்து இருவர் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது சர்ச்சை வெடித்து வந்தது. இந்த நிலையில் அருண் விஜயின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் Mr.லோக்கல் திரைப்படத்தில் அருண் விஜயின் ட்விட்டர் பதிவை நடிகர் சதீஷ் கூற சிவகார்த்திகேயன் “செம்ம காண்டுல இருக்கீங்க போல என் மேல” எனும் வசனம் இடம் பெற்றிருக்கும்.