சென்னை: 7G Films சிவாவுடன் இணைந்து Aalpha Frames மூலம் இயக்குநர் அறிவழகன் இயக்கி தயாரிக்கும், “சப்தம்” திரைப்படத்தின் பூஜை நேற்று (டிச.14) நடைபெற்றது. இந்த படத்தில் இயக்குநர் அறிவழகன் தனது முதல் படமான ’ஈரம்’ படத்தின் கதாநாயகனான நடிகர் ஆதியுடன் மீண்டும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
ஈரம் திரைப்படம் இன்றும் பெரும்பாலான மக்களுக்கு நினைவில் நிற்கும் படியான படமாக மாறியது. அதனை தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 என தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் படங்களை இயக்கியுள்ளார். ஈரம் படத்திலிருந்து இந்த படம் முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.