தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரதமரின் ட்வீட்டை ரீட்வீட் செய்து தீபாவளி வாழ்த்து கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் - Modi tweet for Diwali

மோடியின் ட்விட்டர் பதிவிற்கு ரிப்ளை செய்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மோடியின் ட்வீட்டை ரீட்வீட் செய்து தீபாவளி வாழ்த்து கூறிய ஏஆர் ரகுமான்
மோடியின் ட்வீட்டை ரீட்வீட் செய்து தீபாவளி வாழ்த்து கூறிய ஏஆர் ரகுமான்

By

Published : Oct 24, 2022, 5:13 PM IST

பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலம் கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். கார்கிலில் ராணுவ வீரர்கள் 'தாய் மண்ணே வணக்கம்' பாடலை ஹிந்தியில் பாடியதை உற்சாகமாக கண்டுகளித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் மோடியின் அந்த ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்து,

”இதயம் இதயம் துடிக்கின்றதே

எங்கும் உன்போல் பாசம் இல்லை

ஆதலால் உன் மடி தேடினேன்

தாய் மண்ணே வணக்கம்

Happy Diwali everyone” எனப் பாடலின் தமிழ் வரிகளை பதிவிட்டு, பாடலை இசையமைத்த ஏ. ஆர். ரஹ்மான் ஷேர் செய்துள்ளார்.

இந்த தீபாவளிக்கு பல திரையுலகப் பிரபலங்களும், மற்ற பிரபலங்களும் தங்களது தீபாவளி வாழ்த்துகளைக் கூறி வரும் நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் இந்த தீபாவளி வாழ்த்தை, பொதுமக்கள் வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் - வாரிசு படத்தின் புதிய போஸ்டர்

ABOUT THE AUTHOR

...view details