தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 16, 2022, 5:21 PM IST

Updated : Sep 16, 2022, 5:51 PM IST

ETV Bharat / entertainment

10ஆயிரம் அடி உயரத்திலிருந்து வெளியிடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அறிவிப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மலேசியாவில் நிகழ்த்த இருக்கும் இசை நிகழ்ச்சியின் அறிவிப்பினை 10ஆயிரம் அடி உயரத்திலிருந்து DMI கிரியேஷன்ஸ் நிறுவனத்தலைவர் முகமது யூசஃப் குதித்து வெளியிட்டார்.

1000 அடி உயரத்திலிருந்து வெளியிடப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி அறிவிப்பு
1000 அடி உயரத்திலிருந்து வெளியிடப்பட்ட ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி அறிவிப்பு

ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷிய நாட்டின் கோலாலம்பூரில் வருகிற 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதியன்று நடக்கவுள்ளது. இந்திய சினிமாவில் தனக்கென முத்திரைபதித்த முன்னணி இசை அமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான்.

இவர் பல்வேறு நாடுகளில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சமீபத்தில் இவரது இசையமைப்பில் 'வெந்து தணிந்தது காடு' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி, அந்நிகழ்ச்சியை நடத்தத்திட்டமிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் DMY கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகமது யூசஃபே, சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாராசூட்டில் இருந்து குதித்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

10ஆயிரம் அடி உயரத்திலிருந்து வெளியிடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அறிவிப்பு

இந்த முறையில் வெளியிடுவது மலேஷியாவில் இதுவே முதல் முறை ஆகும். இந்த சாதனை 'மலேஷியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் அதிக உயரத்தில் இருந்து குதிக்கப்பட்ட சாதனையாக வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சினம் படம் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் - நடிகர் அருண் விஜய்

Last Updated : Sep 16, 2022, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details