தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநர் படத்திற்கு இசை அமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்! - first woman director

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் முதல் பெண் இயக்குநர் இயக்கும் புதிய படத்திற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

அரபு நாட்டின் முதல் பெண் இயக்குனர் படத்திற்கு இசை அமைக்கும் ஏஆர்.ரகுமான்
அரபு நாட்டின் முதல் பெண் இயக்குனர் படத்திற்கு இசை அமைக்கும் ஏஆர்.ரகுமான்

By

Published : May 13, 2022, 3:14 PM IST

ஐக்கிய அரபு அமீரக நாட்டின் முதல் பெண் இயக்குநராக உருவெடுத்து உள்ளவர், நாய்லா அல் காதீஜா. இவர் இயக்கிவரும் ’பாப்’ என்ற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் துபாயில் நடந்த 'எக்ஸ்போ- 2020' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் நாய்லா குறித்து இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறியதாவது, 'இயக்குநர் நாய்லா ஒரு மிகச் சிறந்த இயக்குநர். அவர் இயக்கிய படத்தின் சில காட்சிகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதனால் இந்தப் படத்திற்கு இசை அமைக்க ஒப்புக்கொண்டேன்' என்று கூறியுள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பத்த வைச்ச "பத்தல" பாடல் : ஒன்றியத்தை வம்பிழுத்ததாக போலீசில் புகார்

ABOUT THE AUTHOR

...view details