சென்னை: உலகலவில் புகழ் பெற்று இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வளம் வருபவர் ஏஆர் ரகுமான். இவரது இளைய மகன் ஏஆர் அமீன், தனது தந்தையை போலவே இசை உலகில் சாதிக்க துடிப்பவர். அமீனும் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளம் வருகிறார்.
ஏஆர் அமீன் தனது திரை பயணத்தை ஓகே கண்மணி படம் மூலம் தொடங்கினார். இவர் தமிழ், இந்தி போன்ற மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில் பாடியுள்ளார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்திலும் பாடல்கள் பாடி இருக்கிறார்.
இந்நிலையில், ஏஆர் அமீன் ஒரு பெரு விபத்தில் இருந்து நூலிழையில் உயிர்தப்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் பென்னி டயாள், மேடையில் பாடிக்கொண்டிருந்த போது, அங்கு பறந்த ட்ரோன் கேமரா ஒன்று எதிர்பாராத விதமாக அவரது பின் கழுத்தில் மோதியது. இதில் அவர் பதற்றமாகி நிலைதடுமாறி கீழே விழுந்த காணொலி இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஏஆர் ரகுமன் மகன் ஏஆர் அமீன், ஒரு பாடல் ஷூட்டிங்கில் இருந்த போது, மிகப் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக அவர் தபியுள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவன், எனது பெற்றோர், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் எனது ஆசிரியர் ஆகியோருக்கு நன்றி கூறுகிறேன். இரண்டு நாள்களுக்கு முன்பு, நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன். கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக் கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன்.