ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ''ஆன்யா’ஸ் டுடோரியல்'' இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது.
’நானும் ஆஹாவில் படம் பண்ண ஆசைப்படுகிறேன்..!’ - சுந்தர்.சி! ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. வருகிற ஜூலை 1அன்று வெளியாகவுள்ள இந்த இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அதில் பேசிய நடிகை ரெஜினா கஸண்ட்ரா கூறியதாவது, “ஆர்கா மீடியா ஒர்க்ஸ் ஓடிடிக்கு வந்தது பெரிய விஷயம். இந்த படைப்பில் நான் இருப்பது மகிழ்ச்சி. அஜித் மற்றும் அல்லு அரவிந்த் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்யா’ஸ் டுடோரியல் போன்ற சைக்காலஜிகள், திரில்லர் கதைகள் வருவது மகிழ்ச்சி.
நான் நடித்த மது கதாபாத்திரத்தை கண்டிப்பாக தவற விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். பல்லவி போன்ற திறமையான ஆட்கள் சினிமாவிற்கு வருவது மகிழ்ச்சி. நான் அறிமுகமானபோது திரைத்துறையில் பெண்கள் மிகக்குறைவாக இருந்தார்கள். இன்று இந்த மேடையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி.
பல பெண்கள் இணைந்து இந்தத் தொடர் தயாரிப்பில் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி தான் இந்த தொடரின் முக்கியமான தூண். அவரது பணிகள் கதாபாத்திரத்தின் குணங்களைப் பிரதிபலிக்கும் படி இருக்கும். இந்தத் தொடர் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி’ என்றார்.
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியதாவது, “பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். இந்தத் தொடரை இயக்கிய பல்லவி கங்கி ரெட்டிக்கு, வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். படத்தை இயக்குவதே பெரிய சவாலான விஷயம், தொடரை இயக்குவது பெரிய விஷயம்.
ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி அவர் சிறப்பான விஷுவல்களை கொடுக்கக் கூடியவர். சிறு வயதில் பேயை பார்க்க ஆசைப்பட்டு பல விசயங்கள் செய்துள்ளேன். இந்தத் தொடரில் பேயை சுவாரஸ்யமாக காட்டியிருப்பார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” எனப் பேசினார்.
நடிகர் SJ சூர்யா கூறியதாவது, “அல்லு அரவிந்த் உடைய வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய குழுவும், திறமைமிக்க ஆட்கள் நிறைந்த குழுவாக இருக்கிறார்கள். முருகதாஸ் சார் டீமில் உள்ள எனர்ஜிடிக்கான நபர் பல்லவி. அவர் இயக்கிய தொடரின் விழாவிற்கு நான் வந்தது எனக்குப் பெருமையான விஷயம்.
ரெஜினா எப்போதும் தன்னுடைய அழகையும், திறமையையும் தொடர்ந்து கச்சிதமாக தக்கவைத்து கொண்டுள்ளார். நிவேதிதா, ரெஜினா கஸண்ட்ரா இருவரும் இந்தத் தொடருக்கு பொருத்தமான தேர்வு. இருவரது முக அமைப்பும் சகோதரிகள் போல் அப்படியே இருக்கிறது.
எழுத்தாளரை தமிழுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி பேயை பார்க்க ஆசை என்றார். ஒரு படம் எடுத்து தோல்வியடைந்தால் எல்லா பேயையும் பார்த்துவிடலாம். ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத்தரும். பாகுபலி போன்ற படைப்பை எடுத்த ஒரு நிறுவனம், தமிழில் ஒரு சீரிஸ் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது.
பெரும் திறமை வாய்ந்த நபர்கள் இணைந்து இந்தத் தொடரை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி. இந்தத் தொடர் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்’ என்றார்.
நடிகர், இயக்குநர் சுந்தர்.சி கூறியதாவது, “ஆஹா தமிழுக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் மூலமாக புது திறமையாளர்களும், கதைகளும் உருவாவது மகிழ்ச்சி. அல்லு அரவிந்த் ஓடிடியை இவ்வளவு துரிதமாக ஆரம்பித்து, அதில் வெற்றிகண்டுள்ளது மகிழ்ச்சி.
நானும் விரைவில் ஆஹா தமிழுடன் பணிபுரிய விருப்பப்படுகிறேன். ஒரு ஹாரர் தொடரை எழுதுவது சுலபமான காரியம் அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு எபிசோடுக்கும் நிறைய உணர்வுப்பூர்மான காட்சிகளை வைக்க வேண்டும். ட்ரெய்லரை பார்க்கும் போது, ஈர்க்கும் வகையில் உள்ளது.
ஒளிப்பதிவாளர் உடைய பணி சிறப்பாக உள்ளது. ரெஜினா கஸண்ட்ரா போன்ற சிறந்த நடிகர்கள் இந்த தொடரில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. நடிகை நிவேதிதா மிகச்சிறந்த தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தத் தொடரில் அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.
இதையும் படிங்க: விஜயின் 48ஆவது பிறந்தநாள்: 48 அடி நீளமுள்ள கேக்கை 48 பெண்கள் வெட்டி பிரமாண்ட கொண்டாட்டம்!