புது டெல்லி : பாலிவுட் மூத்த நடிகர்கள் அனுபம் கெர், மிதுன் சக்கரபோர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் நடித்துள்ள படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ். மார்ச் 12ஆம் தேதி வெளியான இந்தப் படம், 1989-90களில் காஷ்மீரில் பண்டிட்டுகள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து பேசுகிறது.
திரையரங்குகளில் வெளியான இப்படம் இதுவரை ரூ.236 கோடி வரை வசூலித்துள்ளது. இந்நிலையில், நடிகர் அனுபம் கெர் காணொலி ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் காணொலியில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்த்துவிட்டு காஷ்மீர் பண்டிட்கள் ஆசிர்வாதம் வழங்கினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.