சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் துஷ்யந்த் சினிமா துறையில் தயாரிப்பளராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். இரண்டாவது மகன் தர்சன் கணேசன் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், புனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக்கூத்து நாடகங்கள் ஆகியவற்றில் பங்கேற்று வந்தார்.
சிவாஜி குடும்பத்திலிருந்து மற்றுமொரு ஹீரோ! - சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றுமொரு ஹீரோ
நடிகர் சிவாஜி கணேசன் பேரன் தர்சன் கணேசன் ஹீரோவாக விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![சிவாஜி குடும்பத்திலிருந்து மற்றுமொரு ஹீரோ! சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றுமொரு ஹீரோ!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15357479-thumbnail-3x2-siva.jpg)
சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றுமொரு ஹீரோ!
இந்த நிலையில் அவருக்கு பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவரும் விரைவில் தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளனது. தனது தாத்தாவை போலவே தெருக்கூத்து நாடகத்தில் நடித்து, சினிமா நடிகராக உள்ளரா என்பது கூடியவிரைவில் தெரியவரும்.
இதையும் படிங்க :'தளபதி 67' - உறுதிசெய்த லோகேஷ் கனகராஜ்!
Last Updated : May 22, 2022, 10:53 PM IST