இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொன்னி நதி’ எனும் பாடலின் மேக்கிங் வீடியோ அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசும் நடிகர் கார்த்தி, “இது வரை சோழ நாட்டிற்கே வராத ஓர் இளவரசன்(வந்தியத் தேவன்) முதன்முதலாய் அந்த நாட்டை பார்க்க வரும் பயணம் தான் இந்தப் பாடல்.
வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு என்னவெல்லாம் பிடிக்கும்...?, பெண்கள், சாப்பாடு, இயற்கை.., இவை அனைத்தையும் அவன் ரசித்துக்கொண்டு வரும்படியாய் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவனின் குதிரையின் பெயர் ‘செம்பன்’. படத்தில் வந்தியத்தேவனை சற்றும் மதிக்காத இரு கதாபாத்திரங்கள் உண்டு, ஒன்று பூங்குழலி; மற்றொன்று இந்தக்குதிரை.