பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஸ் அலுவலராக இருந்தபோது ஒரு திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு கைகள் இல்லாமல், சர்வதேச அளவில் நீச்சலில் சாதனைப்படைத்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கும் இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இந்நிலையில், ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டீஸர் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுப்பின், சில தொழில்நுட்பப் பிரச்னைகளால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று(ஜூன் 7) காலை அப்படத்தின் டீஸர் அப்படக்குழுவினரால் இணையத்தில் வெளியிடப்பட்டது. ‘சிங்கம்’ அண்ணாமலை என்று முதல் படத்திலேயே மாஸ் ஹீரோ போல் அடைமொழியுடன் புல்லட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார், அண்ணாமலை.