சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் இன்று (ஜூன் 3) வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் அனிருத் இசையில் நான்கு படங்கள் வெளியாகி ரசிகர்களிடயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ”2022ஆம் ஆண்டு தொடங்கியபோது. எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஏனென்றால் ஏப்ரல் 13ஆம் தேதியிலிருந்து ஜூன் 3ஆம் தேதி வரை நான்கு படங்கள் வெளியாகியுள்ளது.
பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், இப்போது விக்ரம். என் இசைக்கு மக்களாகிய நீங்கள் கொடுத்த வரவேற்பே என்னை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. ’மாவரிக்’ இசைக்குழுவின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. நாங்கள் விரும்பி உருவாக்கியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நான் எப்போதும் கூறுவது போல, என் வாழ்வில் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். அன்புடன், அனிருத்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Vikram FDFS: ரசிகர்களுடன் வைப் ஏற்றிய லோகேஷ், அனிருத்