தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ரன்பீர் கபூரின் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷனில் வெளியான அனிமல் திரைப்படம்..! ரசிகர்கள் வரவேற்பு! - பாபி தியோல்

Audience Opinion on Animal Movie: ரன்பீர் கபூர் நடிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள அனிமல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ரன்பீர் கபூரின் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷனில் Animal திரைப்படம் எப்படி இருக்கு
ரன்பீர் கபூரின் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷனில் Animal திரைப்படம் எப்படி இருக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 1:50 PM IST

ஹைதராபாத்:பாலிவுட் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அனிமல் (Animal) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இதனையடுத்து இன்று இப்படம் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அனிமல் திரைப்படம் தந்தைக்கும் மகனுக்குமான அளவுகடந்த அன்பு மற்றும் அவரது தந்தையைத் தாக்கிய நபரை மகன் பழிதீர்க்கும் கதையாகும். இந்த படத்தின் முதல் காட்சி முடிந்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரபல பாலிவுட் சினிமா வர்த்தகர் தரண் ஆதர்ஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “அனிமல் படம் சிறிய கிராமம் முதல் மாநகரம் வரை, சிறிய திரையரங்கம் முதல் மல்டிபிளக்ஸ் வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது” எனக் கூறியுள்ளார்.

மேலும், சமூக வலைத்தளத்தில் சினிமா ரசிகர் ஒருவர், “அனிமல் படம் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாஸ்டர் பீஸ், படம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் இந்த படத்தின் நீளம் ஒரு சில பேருக்கு குறையாகத் தெரிகிறது. அனிமல் திரைப்படம் 3 மணி நேரம் மேல் ஓடும் நீளம் கொண்டதாகும்” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரன்பீர் கபூர் பேசுகையில், “இந்த படத்தின் கதையைக் கூறுவதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால் நாங்கள் பெரிய படத்தை எடுத்துள்ளோம். நாங்கள் 3 மணி நேரம் 49 நிமிட வெர்ஷனை பார்த்தோம். அதுவும் நன்றாக இருந்தது” என்றார்.

மேலும் "சந்தீப் ரெட்டி இந்த படத்திற்கு அதிக உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தின் நீளத்தை மறக்கடித்து இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்" என கூறியுள்ளார். மேலும், இன்று விக்கி கௌசல் நடித்துள்ள 'சாம் பகதூர்' படமும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:பிருத்விராஜின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடுஜீவிதம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details