தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'ஓ சொல்றீயா மாமா' வெற்றியைத் தொடர்ந்து ஆண்ட்ரியா பாடிய பாடல்! - natti will be the lead roll

ஆண்ட்ரியா தற்போது 'வெப்' படத்திற்காக கார்த்திக் குமார் இசையில் புதிய 'பப்' பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

ஓ சொல்றியா மாமா வெற்றியை  தொடர்ந்து 'வெப்' படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்!
ஓ சொல்றியா மாமா வெற்றியை  தொடர்ந்து 'வெப்' படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்!

By

Published : Apr 5, 2022, 6:28 PM IST

சென்னை: வேலன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் படம் 'வெப்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக்கடற்கரைச் சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாசாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார், இயக்குநர் ஹாரூன்.

சமீபத்தில் 'புஷ்பா' படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த 'ஓ சொல்றீயா மாமா..' பாடலை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா 'வெப்' படத்துக்காக "வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டைய். வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை. இரவு முடியும் வரை... நீ ஆடு.. " எனும் பப் பாடலை பாடியுள்ளார். பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியில் படத்தின் பாடல் வெளியீடும் அடுத்த மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:ரஜினிக்கு மகனாகும் சிவகார்த்திகேயன்?

ABOUT THE AUTHOR

...view details