ரிஷிகேஷ் (உத்தரகாண்ட்):பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நேற்று (மார்ச் 30) சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் 'RRR' திரைப்படத்தைக் கண்டுகளித்துள்ளார்.
’ராமா பாலஸ்’ (Rama Palace ) திரையரங்கில் திரைப்படத்தை காண வந்த அமிதாப் பச்சனை அந்தத் திரையரங்கின் உரிமையாளரான அஷோக் கோயலும், அவரது மகன் ஹிமன்ஷு கோயலும் வரவேற்றனர்.
மேலும், அவரது ரசிகர்களும் பெருமளவில் அங்கு திரண்டிருந்தனர். அமிதாப் பச்சன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
இதனால், அமிதாப் பச்சன் தெஹரி மாவட்டம், நரேந்திரநகர் பகுதியில் உள்ள ஆனந்தா ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை தியேட்டர் சென்று பார்த்துள்ளார். ஆர்ஆர்ஆர் படம் வெளியான மூன்று நாளில் ரூ.650 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:அனுபம் கெருக்கு காஷ்மீர் பண்ட்டிட்கள் ஆசிர்வாதம்!