பாலிவுட்டின் உச்ச நடிகரான அமிதாப் பச்சனுக்கு 79 வயதாகிறது. 2020ஆம் ஆண்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளார். இதுகுறித்து அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“நான் இப்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன் இன்று அதிகாலை தனது ரசிகர்களுக்காக ஒரு செய்தியை வெளியிட்டுளார்."நான் குணமடைந்து வருவதற்காக தங்கள் வேண்டுதல்களையும், அக்கறையையும், அன்பையும் கருணையுடன் அளித்த இதயங்களுக்கு என் கைகளை கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குள் எப்போதும் உங்கள் கருணையும், அன்பும் இருக்கும். எனக்கு உடல்நலம் தொடர்பான அறிவிப்புகளை அளிக்கும் எண்ணம் இல்லை, ஆனால் நான் உங்களை அப்டேட்டாக வைத்துக் கொள்ள வேண்டும்," என்று கூறியுள்ளார்.
மேலும்,”இரண்டு தடுப்பூசி செலுத்தியிருந்தேன், அதன் பின் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தியிருந்தேன். அனைத்து நோய் தடுப்பு வழிமுறைகளையும் மீறி கரோனா வென்றுவிட்டது. இதனால் நான் ஏமாற்றமடைகிறேன். கரோனா பாதிப்பால் புனிதமான பணிப்பொறுப்புகள் திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை.