டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகர் அமிதாப் பச்சன் தரப்பில் விளம்பர உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அமிதாப் பச்சன் பெயரில் போலியாக லாட்டரி விற்பனை நடக்கின்றன. ஆன்லைன் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அவரது புகைப்படம் மற்றும் குரல் தவறாக பயன்படுத்தப்படுகிறது.
அதன்காரணமாக பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஆகவே, அனுமதியின்றி அமிதாப் பச்சனின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்திய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி நவீன் சாவ்லா அமர்வில் விசாரணை செய்யப்பட்டது.