கடந்த 2019ஆம் ஆண்டில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷனில் தான் இயக்கி வெளியான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர், இயக்குநர் அதியன் ஆதிரை. இந்தத் திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும்,ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து, தற்போது அதே நீலம் புரொடக்ஷனின் கீழ் பெயரிடப்படாத மற்றொரு படத்தை இயக்கவிருக்கிறார், அதியன் ஆதிரை. ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தில் நீலம் புரொடக்ஷனின் ஆஸ்தான நடிகரான கலையரசன் நடிக்கவிருந்த நிலையில், தற்போது அந்தக் கதையில் இயக்குநரும் நடிகருமான அமீர் நடிக்க விருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.