தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"நலமுடன் இருக்கிறேன்" - வதந்திக்கு நடிகை லட்சுமி விளக்கம்! - சம்சாரம் அது மின்சாரம்

நடிகை லட்சுமி இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக அவர் ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

Actress
Actress

By

Published : Nov 30, 2022, 3:19 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி. விசு இயக்கிய "சம்சாரம் அது மின்சாரம்" படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று(நவ.30) காலையில் இவர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகினர் பலரும் நடிகை லட்சுமி இறந்துவிட்டதாக நினைத்து, இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து தான் நலமுடன் இருப்பதாக நடிகை லட்சுமி ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், "யார் செய்த வேலை என்று‌ தெரியவில்லை. நான் நலமாக இருக்கிறேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு இருக்கிறேன். என் மீது அக்கறை கொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்..!

ABOUT THE AUTHOR

...view details