ஹைதராபாத்: பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் தெலுங்கில் ஆர்யா 2, அலா வைகுண்டபுரம், புஷ்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது சுகுமார் இயக்கும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா 2 படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் இயக்குநர் அட்லீயை மும்பையில் கடந்த வெள்ளியன்று சந்தித்ததாக கூறப்படுகிறது. இருவரும் 2 மணி நேரம் சந்தித்து பேசியதாகவும், புதிய படத்தில் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.