தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

’கோப்ரா படத்தில் ஏழு கெட்டப்கள் திணிக்கப்பட்டதல்ல...!’ - விக்ரம் - கோப்ரா

”இந்தப் படத்திலுள்ள ஏழு கெட்டப்களும் திணிக்கப்பட்டதல்ல. கதைக்கு தேவைப்பட்டது”, என தனது கோப்ரா படம் குறித்து நடிகர் விக்ரம் ட்விட்டர் ஸ்பேசில் தெரிவித்துள்ளார்.

’கோப்ரா படத்தில் ஏழு கெட்டப்கள் திணிக்கப்பட்டதல்ல...!’ - விக்ரம்
’கோப்ரா படத்தில் ஏழு கெட்டப்கள் திணிக்கப்பட்டதல்ல...!’ - விக்ரம்

By

Published : Aug 19, 2022, 4:10 PM IST

’டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்‘ போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது நடிகர் விக்ரமை வைத்து ‘கோப்ரா‘ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

விக்ரமுக்கு இப்படத்தில் ஏழு கெட்டப்புகள் என்று கூறப்படுகிறது. மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் டீஸர், பாடல்கள் எல்லாம் வெளியாகிவிட்ட நிலையில் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் விக்ரம் மற்றும் கோப்ரா படக் குழுவினர் டிவிட்டர் ஸ்பேஸில் கலந்து கொண்டு படம் பற்றியும் படப்பிடிப்புப் பற்றியும் பேசியுள்ளனர்.

அப்போது ’கோப்ரா’ படம் பற்றி ஜாலியாகப் பேசிய விக்ரம், "ரஷ்யாவில் மிக அதிகமான குளிரில் ஷூட்டிங் செய்தோம். உண்மையில் அந்த குளிரில் கொஞ்ச நேரம் கூட நிற்க முடியாது. ஆனால் ரொம்ப நேரமா அங்கு இருந்து படப்பிடிப்பு நடத்தினோம். இது புது அனுபவமாக இருந்தது என்றார்.

இப்படத்தில் உள்ள ஏழு கெட்டப்களும் திணிக்கப்பட்டது அல்ல. கதைக்கு தேவைப்பட்டது என்பதால் தான் வைத்துள்ளோம். ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்கிறார்கள். இந்த முறை மிஸ் ஆகாது நிச்சயம் திரைக்கு வரும். என் மகன் துருவ் விக்ரம் உடன் நான் நடித்த 'மகான்' படம் திரையில் வந்திருக்க வேண்டியது மிஸ் ஆகிவிட்டது.

ஆனால் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்கள் இந்த வருடம் திரைக்கு வருவது உறுதி என்றார். அதுமட்டுமின்றி இயக்குனர் அஜய் ஞானமுத்துவும் நானும் இப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது..?

ABOUT THE AUTHOR

...view details