தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தமிழ்நாட்டில் இனி மதுவை ஒழிக்க முடியாது - இயக்குனர் பேரரசு! - கோயில்களில் மட்டும்தான் மதுபானம் இல்லை

தற்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் வந்துவிட்டது தமிழ்நாட்டில் இனி மதுவை ஒழிக்க முடியாது என இயக்குனர் பேரரசு கூறினார்

தமிழ்நாட்டில் இனி மதுவை ஒழிக்க முடியாது - இயக்குனர் பேரரசு
தமிழ்நாட்டில் இனி மதுவை ஒழிக்க முடியாது - இயக்குனர் பேரரசு

By

Published : Jan 21, 2023, 11:38 AM IST

சென்னை: பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் 'நெடுமி'. ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ள இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பேரரசு, பயில்வான் ரங்கநாதன், பத்திரிகையாளர் முக்தார், படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது இயக்குனர் பேரரசு பேசுகையில், பனையேறிகளின் வாழ்க்கையை இயக்குனர் நந்தா அற்புதமாக படமாக்கியுள்ளார். இது போன்ற படங்களை முழுமையாக தெரிந்தவர்கள் தான் எடுக்க முடியும். முன்பெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கள்ளுக்கடைகள் இருந்தன. கள்ளு குடித்தால் உடலுக்கு நல்லது. தற்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் வந்துவிட்டது.

கோயில்களில் மட்டும்தான் மதுபானம் இல்லை. இயக்குனர் கோயில்களிலும் கள்ளு விற்க சொல்வது சரி வராது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் கள்ளு டாஸ்மாக் கடையிலேயே விற்பனை செய்ய வேண்டும். தமிழகம் என்று சொல்வதா தமிழ்நாடு என்று சொல்வதா தெரியவில்லை. இதில் ஒரு அரசியல். இது தமிழ்நாடு அதை யாராலும் மாற்ற முடியாது. அம்மாவை அன்னை என்றும் சொல்லலாம்.

கள்ளுக்கடைகளால் விவசாயிகள் வாழ்வார்கள். சாராய ஆலைகள் மூலம் தனியார் வாழ்கின்றனர்‌. தமிழகத்தில் இனி டாஸ்மாக்கை ஒழிக்க முடியாது. பத்திரிகையாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்வதை வரவேற்கிறேன். ஆனால் நடுநிலையாக செயல்பட வேண்டும். ஒருசார்பாக இருக்க கூடாது. குறிப்பிட்ட கட்சியை மட்டுமே கேள்விகேட்க கூடாது. அதனை மக்கள் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளும் கட்சியினரை கேள்விகேட்க வேண்டும் என்றார்

பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசும்போது, "இப்படம் பனையேறிகளின் சிரமங்களைச் சொல்வதாகக் கருதுகிறேன். ஆனால் இன்று பனையேறிகள் சிரமப்படவில்லை. மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நானும் ஒரு பனையேறி தான். அதைச் சொல்வதில் எனக்கு ஒன்றும் தயக்கம் இல்லை. பெருமையாகவே சொல்கிறேன்.

எஸ்.வி. சுப்பையா தயாரிப்பில் 'காவல் தெய்வம்' படத்தில் சிவாஜி கணேசன் ஒரு பனையேறியாக நடித்திருப்பார். சிவாஜி கணேசன் அந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்திருப்பார். காரணம் கேட்டபோது பெருந்தலைவர் காமராஜர் சம்பந்தப்பட்ட சமுதாயம் என்பதால் தான் அப்படி நடித்துக் கொடுத்ததாகக் கூறினார்.

இன்று தமிழ்நாட்டில் 17 எம் எல் ஏக்கள், இரண்டு அமைச்சர்கள் பனையேறிகள்தான். அந்த சமுதாயத்தில் இருந்து 27 ஐஏஎஸ், அதிகாரிகளும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளும் வந்துள்ளனர். பனையேறிகளில் எவரும் வறுமையில் வாழவில்லை என கூறினார்.

இதையும் படிங்க: 'உத்ரா' பட தயாரிப்பாளர் மீது ரூ.41 லட்சம் மோசடி புகார்.. போலீசார் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details