நண்பேன்டா.. புதுச்சேரில் ஒன்றாக பேனர் வைத்து தெறிக்கவிடும் அஜித்- விஜய் பேன்ஸ்! புதுச்சேரி:பொங்கல் பண்டிகைக்கு திரை விருந்தாக அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் ஒன்றாக வெளியாகின்றன. புதுச்சேரி நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள 16 திரையரங்குகளிலும் இந்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.
இதனை ஒட்டி நகரம் மற்றும் கிராமங்கள் முழுதும் அஜித்-விஜய் பேனர்களை ரசிகர்கள் வைத்து மகிழ்ந்து வருகின்றனர். நகரின் முக்கியப்போக்குவரத்து சந்திப்புகளில் இரு நடிகர்களின் கட் அவுட்- பேனர்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளன.
இதில் உச்சகட்டமாக, புதுச்சேரி காமராஜ் சாலையில் "தல தளபதி" என குறிப்பிட்டு விஜய்க்கும், அஜித்துக்கும் ஒரே கட்அவுட் ரசிகர்கள் வைத்துள்ளனர். இதில் புல்லட்டை அஜித் ஓட்டுவது போலவும் பின்னால் விஜய் உட்கார்ந்து வருவது போலவும் உள்ளது.
இது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. புல்லட் நம்பர் பிளேட்டில் எண்களுக்கு பதிலாக "தல தளபதி' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மிரட்டும் அஜித்; துணிவு படத்தில் அஜித்தின் மாஸ் ஸ்டில்ஸ்!