தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கியவர்.
இன்றைய நிலையில் அஜித்குமார் படம் வெளியாகும் போது அது பண்டிகையை விட கோலாகலமாகக் கொண்டாடப்படுவதை ரசிகர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் அஜித்துக்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் ஷாலினி. ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். காதலுக்கு மரியாதை ஷாலினிக்கு இவருக்கு மிகப் பெரிய பெயரை பெற்றுத்தந்தது.
அதனை தொடர்ந்து சரண் இயக்கத்தில் அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்போது தான் இவருக்கும் அஜித்துக்கும் காதல் மலர்ந்தது. அப்படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அமர்க்களம் படப்பிடிப்பு சமயத்தில் ஷாலினிக்கு கத்தி பட்டு ரத்தம் வருவதை பார்த்த அஜித் துடித்துப்போய் விட்டாராம். இதேபோல் படப்பிடிப்பு தளத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை இயக்குனர் சரண் ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.