கடந்த சில நாள்களாக நடிகர் அஜித், இந்தியா முழுவதும் பைக் ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில், தற்போது தனது பைக் ட்ரிப்பின் ஒரு பகுதியாக தாய்லாந்த் பேங்காக்கில் புத்தர் சிலை முன்பு அஜித் நிற்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்தின் இந்த புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “புயலுக்கு முன் அமைதி” எனும் தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அஜித்தின் அடுத்த படமான AK62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவுள்ள நிலையில் தற்போது அஜித்தின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளதை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
முன்னதாக இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யுவனுக்காக ஒரு உலக சாதனை - அசத்திய மாணவர்கள்