நடிகர் அஜித்குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பெயரிடப்படாத AK 61 என்கிற இந்தப் படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் வெளி நாட்டில் நடைபெறும் படப்பிடிப்பிற்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
அப்போது விமான நிலையத்தில் இருந்த பயணிகள் திடீரென தங்கள் செல்போனில் நடிகர் அஜித்குமாரை படம் பிடித்துள்ளனர். பெண் ஒருவர் அஜித்திடம் செல்ஃபி எடுப்பதற்கு கேட்டுள்ளார். ஆனால், நடிகர் அஜித் மறுப்புத்தெரிவித்து, அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக்கேட்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளார்.