தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Thunivu trailer:"ஹீரோ மாதிரி நடிக்க வேண்டாம்" மிரளவைக்கும் 'துணிவு' டிரைலர் வெளியீடு! - Ajith Kumar thunivu official trailer released

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடிகர் அஜித்குமாரின் 'துணிவு' டிரைலர் வெளியானது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 31, 2022, 8:29 PM IST

சென்னை:எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் அஜித்குமார் மீண்டும் இணைந்திருக்கிறார். ஆக்‌ஷன், த்ரில்லர் பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் 'துணிவு' படத்தில் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

படத்தில் மஞ்சுவாரியர், ஜான் கொக்கேன், சமுத்திரகனி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12-ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சில்லா சில்லா, கேங்ஸ்டா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இன்று மாலை 7 மணிக்கு படத்தில் ட்ரைலர் வெளியானது. வங்கி ஒன்றில் கொள்ளையை அரங்கேற்றும் அஜித், அதனை தடுக்க போராடும் காவல்துறை அதிகாரி சமுத்திரகனி துப்பாக்கிச் சண்டை என பிரமாண்டமாக உள்ள டிரைலர் மூலம் படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டியுள்ளதாக அஜித் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:இன்று வெளியாகிறது அஜித்தின் ’துணிவு’ பட ட்ரைலர்

ABOUT THE AUTHOR

...view details