அண்மைகாலமாக தங்களுக்கு பிடித்த நடிகர்களின் திரைப்படங்களின் அப்டேட் கேட்டு வித்தியாசமான முறையில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் அஜித் நடித்த வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள், வெளிநாடுகளில் பிரச்சாரங்கள் என கலக்கி வந்தனர்.
இந்த நிலையில் வரும் பொங்கல் அன்று நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் நடித்த வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இதனையடுத்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அபிமான நடிகர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.