படங்களைத் தாண்டி எப்போதும் கார், பைக், ஹெலிகாப்டர், துப்பாக்கி, கேமரா என தனக்கு விருப்பமான செயல்களில் ஈடுபட்டு வருபவர், நடிகர் அஜித். அவர் தற்போது மேற்கொண்டுள்ள பைக் பயணத்தின் வரைபடத்தினை அவரது நண்பர் சுப்புராஜ் வெங்கட் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'அஜித் குமார் தனது உலகம் சுற்றும் பயணத்தை 2021ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், தற்போது பாரத தேசம் முழுவதும் சுற்றி வருகிறார். மீதமுள்ள மாநிலங்களை முடித்துவிட்டு வரும் 2023ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல உள்ளார். இதுவரை இந்தியாவில் சண்டிகர், மணாலி, கார்கில், ஸ்ரீநகர், ஜம்மு, ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத் போன்ற பல இடங்களுக்குச் சென்றுள்ளார்.