மும்பை: அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ரன்வே 34 (Runway 34) விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவரின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போலா (Bholaa) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கைதி (Kaithi) படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் ஆகும். ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள போலா படத்தில், நடிகை தபு போலீஸ் வேடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் குறித்த அறிவிப்பை அஜய் தேவ்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், “தமிழ் படமான கைதியின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக போலா உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் என்னுடன் முக்கிய கதாபாத்திரத்தில் தபு போலீஸ் அலுவலராக நடிக்கிறார்.