சென்னை:'ஐமா' திரைப்படம் சர்வைவல் சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்றாலும் கூட இத்திரைப்படத்தை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இத்திரைப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும், பாடல்களும், பின்னணி இசையும் அமைந்து உள்ளதே இத்திரைப்படத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.
தமிழ் சினிமாவுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ' ஐமா' திரைப்படம் ஒரு புதுமையான, புதுவகையான அனுபவத்தையும் உணர்வையும் கண்டிப்பாக உங்களுக்குள் உருவாக்கும்.
புதுமையான உணர்வை கொடுக்கும் தகுதியான படங்களுக்குத் தமிழ் ரசிகர்களிடம் அங்கீகாரமும், வரவேற்பும் கிடைக்கும் காலம் இதுவாகும். தமிழ் ரசிகர்களின் ரசனையை மட்டும் நம்பி உருவாகி இருக்கும் படம் தான் 'ஐமா' திரைப்படம். ஏனென்றால் இது வழக்கமான த்ரில்லர் படம் அல்ல. புதுமையை விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாகியுள்ள 'ஐமா' திரைப்படம்.
அது என்ன ஐமா?'ஐமா' எனும் சொல்லில் (ஐ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது, ஆகவே 'ஐமா' எனும் சொல் இறைவனின் வலிமை என்கிறார் இப்படத்தின் இயக்குநர். எந்த உயிர்களுக்கும் தீங்கு நினைக்காத இருமனிதர்களுக்கு ஏற்படும் தடைகளையும், துரோகங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் சுவாரசியத்தைச் சொல்லும் விளையாட்டின் ஆட்டம் தான் ஐமாவின் பொருள் ஆகும்.
துரோகங்கள், துன்பங்கள், சோதனைகள், வேதனைகள், தடைகள், தடுமாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ளும் அனுபவத்தில் ஆரம்பிக்கும் ஆற்றலின் விளக்கமே 'ஐமா' திரைப்படம். எளிதாகப் புரியும்படி சொன்னால் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு.
இப்படத்தை எழுதி இயக்கியவர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. இவர் தமிழ், மலையாளத்தில் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளார் ஆருயிரே எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். தமிழ் படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட இயக்குநர் ஆவார்.