மும்பை:நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நேற்று (ஜனவரி 22) மும்பையில் உள்ள ஷாருக்கான் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ஷாருக்கான் நடித்துள்ள பதான் படம் திரைக்கு வருவதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இந்த படத்தில் ஷாருக்கான் உடன் தீபிகா படுகோன், ஜான் அபிரகாம் உள்ளிட்ட முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனிடையே பதான் படத்தில் இடம்பெற்ற பாடல் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கியது.
இருப்பினும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மும்பை மன்னட் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்களை நடிகர் ஷாருக்கான் சந்தித்தார். அவர்களிடையே தனது பிரபலமான சைகைகளை ஷாருக்கான் செய்து காட்டியது, ரசிகர்களை கூடுதல் உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் ஷாருக்கான் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர்களின் நடுவில் சிவப்பு கார் சிக்கிக் கொண்டது எப்படி என்று பதிவிட்டு இருந்தார். அதோடு பதான் படத்திற்கான டிக்கெட்டுகளை புக் செய்யுமாறும், விரைவில் அனைவரையும் சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பதான் படத்தை தொடர்ந்து ஷாருக்கானுக்கு இரண்டு படங்கள் வெளியாகின்றன. அதில் அட்லி இயக்கத்தில் தயாராகி வரும் ஜவான் படமும் ஒன்று. ஜவான் படம் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பிக்பாஸ் சீசன் 6 ஃபைனலில் திடீர் ட்விஸ்ட்.. வெற்றிபெற்ற போட்டியாளர் யார்?; பரிசுத்தொகை தெரியுமா?