தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆஹா தமிழுடன் இணைந்து ‘டி கம்பெனி’ தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் - ஆஹா தமிழ்

ஆஹா ஒரிஜினல் படைப்பிற்காக தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் (புரொடக்சன் நம்பர் 4) தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி கிளாப் அடிக்க, இயக்குநர் பிரம்மா முதற்காட்சிக்கான ஒளிப்பதிவைத் தொடங்கி வைத்தார்.

ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

By

Published : Sep 8, 2022, 8:35 PM IST

ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள், என பல அசலான ,தமிழர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர் திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி வருகிறது.

இத்தளத்தில் வெளியான ‘மாமனிதன்’, 'குருதி ஆட்டம்', போன்ற தமிழ் திரைப்படங்கள், சமீபத்தில் வெளியான 'ஜீவி 2' உள்ளிட்ட திரைப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளம் தமிழில் பிரத்யேக படைப்புகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.

விரைவில் நடிகர் ஜீவா பங்குபெறும் ‘சர்கார் வித் ஜீவா’ பொழுதுபோக்கு விளையாட்டு நிகழ்ச்சி இத்தளத்தில் வரவுள்ளது. ஆஹா தயாரித்த ‘பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், டர்மரெரிக் மீடியாவுடன் இணைந்து ’ரத்த சாட்சி’ படத்தினை தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, டி கம்பெனியுடன் இணைந்து தற்போது புதிய படத்தைத் தயாரிக்கிறது.

தயாரிப்பு நிறுவனமான டி கம்பெனி, சிலம்பரசன் நடிப்பில் தயாரான 'ஈஸ்வரன்', ஜெய், பாரதிராஜா நடிப்பில் தயாரான 'குற்றம் குற்றமே' ஆகிய திரைப்படங்களையும், ஆஹாவில் வெளியாகி வெற்றி பெற்ற 'குத்துக்கு பத்து' எனும் வலைதள தொடரையும் தயாரித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனத்தின் நான்காவது படைப்பாக புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படம் ஆஹா ஒரிஜினல் படைப்பாகவும் உருவாகிறது.

ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படத்தில், சார்லி, 'சேதுபதி' பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, கே பி ஒய் தீனா, நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைக்கிறார்.

கலை இயக்கத்தை எம்.எஸ்.பி மாதவன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி.மதன் மேற்கொள்கிறார். பேமிலி டிராமா / டிராஜிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிக்கிறார். ஆஹா ஒரிஜினல் படைப்பாக தயாராகும் இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இதையும் படிங்க: என் மகள் காதல் திருமணமா? - விளக்கம் அளித்த ராஜ்கிரண்

ABOUT THE AUTHOR

...view details