தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜவான் விஜயகாந்த் படத்தின் காப்பியா? - மீண்டும் சர்ச்சையில் அட்லீ! - காப்பி கேட் அட்லீ

இயக்குநர் அட்லீ, நடிகர் ஷாருக்கானை வைத்து தற்போது இயக்கி வரும் திரைப்படம் ஜவான். இப்படம் விஜயகாந்த் படத்தின் காப்பி என ஓர் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஜவான் விஜயகாந்த் படத்தின் காப்பியா? - மீண்டும் சர்ச்சையில் அட்லீ!
ஜவான் விஜயகாந்த் படத்தின் காப்பியா? - மீண்டும் சர்ச்சையில் அட்லீ!

By

Published : Nov 4, 2022, 8:04 PM IST

இயக்குநர் அட்லீ, தற்போது 'பாலிவுட் பாஷா' ஷாருக்கானை வைத்து 'ஜவான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் மாணிக்கம் நாராயணன் என்பவர் புகார் கொடுத்துள்ளார். விஜயகாந்த் நடித்த 'பேரரசு' படத்தின் கதையை 'ஜவான்' படத்தில் பயன்படுத்தி இருப்பதாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செயற்குழுவில் விவாதித்து புகார் குறித்து, விசாரணை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அட்லீ மீது கதைகளை காப்பி எடுத்து இயக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கதையை காப்பி அடித்துள்ளதாக அட்லீ மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:Video:நடிகை ஐஸ்வர்யா லட்சுமி 'குமரி' படம் குறித்து காணொலி வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details