தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மாபெரும் வெற்றி பெற்ற சர்தார் திரைப்பட இயக்குனருக்கு பிரம்மாண்ட பரிசு - director PS Mithran has been gifted a car

“சர்தார்“ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

மாபெரும் வெற்றி பெற்ற சர்தார் திரைப்பட இயக்குனருக்கு பிரம்மாண்ட பரிசு
மாபெரும் வெற்றி பெற்ற சர்தார் திரைப்பட இயக்குனருக்கு பிரம்மாண்ட பரிசு

By

Published : Nov 2, 2022, 2:28 PM IST

சென்னை:தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”.

உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.

விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ திரைப்படம் இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடதக்கது.

சர்தாரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியன் 2 படப்பிடிப்பில் இணந்த யுவராஜ் சிங்கின் தந்தை

ABOUT THE AUTHOR

...view details