தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கடாவர் படத்தின் வெற்றிக்குப்பிறகு தமிழில் பிசியான நடிகர் திரிகுன்! - தெலுங்கு

தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகர் திரிகுன், கடாவர் படத்தின் வெற்றிக்கு பின் தமிழிலும் பிசியாகியுள்ளார்.

கடாவர் படத்தின் வெற்றிக்குப்பிறகு தமிழில் பிசியான நடிகர் திரிகுன்!
கடாவர் படத்தின் வெற்றிக்குப்பிறகு தமிழில் பிசியான நடிகர் திரிகுன்!

By

Published : Aug 19, 2022, 4:39 PM IST

சென்னை:தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் திரிகுன். இவர் நடிப்பில் சமீபத்தில் கடாவர் திரைப்படம் வெளியானது. மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும் அதைச் சுற்றி நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது.

இதில் நடிகர் திரிகுன், அமலாபால், ஹரீஸ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா, உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து இருந்தனர். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகி உள்ள கடாவர் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் தனக்கு வரவேற்பு கிடைத்தது பெரும் மகிழ்வை தருகிறது என்ற திரிகுன் மேலும் கூறியதாவது,

கடாவர் படத்தின் வெற்றிக்குப்பிறகு தமிழில் பிசியான நடிகர் திரிகுன்!

தாய்மொழி தமிழில் மீண்டும் படம் பண்ணுவது உற்சாகமாக இருக்கிறது. இரண்டு தமிழ்படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. தமிழில் முன்னணி இயக்குனரின் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். தெலுங்கிலும் வரிசையாக படங்கள் செய்து வருகிறேன்.

இரண்டு மொழிகளிலும் நடிப்பது வெவ்வேறு கலாச்சாரங்கள், வாழ்வியல் முறைகள், மனிதர்களின் அணுகுமுறைகள் பெரும் அனுபவமாக இருக்கிறது. இரண்டு மொழிகளும் எழுதப் படிக்க தெரிவதால் திரைக்கதையின் ஆழம் புரிந்து நடிக்க வசதியாக இருக்கிறது. தெலுங்கில் பிரேமதேசம், கஞ்சம், கன்னடத்தில் லைன்மேன், தமிழில் டெவில் ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.” என்றார்.

இதையும் படிங்க:’நட்சத்திரம் நகர்கிறது’ ட்ரெய்லர் வெளியானது...

ABOUT THE AUTHOR

...view details