தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'ரூ.3,000 சம்பளத்திற்கு மழலையர் பள்ளி ஆசிரியையாக வேலை செய்தேன்' - ஸ்வேதா பச்சன் உருக்கம்! - பெண்களின் நிதி சுதந்திரம்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன், தனக்குத் திருமணமாகி டெல்லியில் இருந்தபோது, ​ஒரு மழலையர் பள்ளியில் மூன்றாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு உதவி ஆசிரியையாக வேலை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

After
After

By

Published : Nov 6, 2022, 1:32 PM IST

மும்பை: பிரபல நடிகர் அமிதாப் பச்சன்(80) பல தசாப்தங்களாக பாலிவுட் சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் ஹோட்டல், ரியல் எஸ்டேட் உள்ளிட்டப்பல்வேறு தொழில்களையும் செய்துவருகிறார். இவரிடம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவரது மகன் அபிஷேக் பச்சன். பாலிவுட் நடிகரான இவர், நடிகையும் மாடலுமான ஐஸ்வர்யா ராயைத் திருமணம் செய்துகொண்டார்.

அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சன், பிரபல தொழிலதிபர் நந்தா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கோடீஸ்வரரான அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனும் மருமகன் நந்தாவும், பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக அண்மையில் செய்தி வெளியானது. இது பாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஸ்வேதா பச்சனின் மகள் நவ்யா நவேலி நந்தா நடித்து வரும் 'வாட் தி ஹெல் நவ்யா' என்ற பாட்காஸ்ட் எபிசோடில், தனது தாயார் ஸ்வேதா பச்சனையும், பாட்டியான ஜெயா பச்சனையும் பங்கேற்கச் செய்தார். அதில், பெண்களின் நிதி சுதந்திரம் உள்ளிட்டவை குறித்து இருவரும் பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஸ்வேதா பச்சன், "பணத்துடனான எனது உறவு மிகவும் மோசமானது. நான் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில், உணவு வாங்குவதற்காக எனது சகோதரனிடம் கடன் வாங்கினேன். உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும்போது, உணவு இல்லாமல் வாழ முடியாது அல்லவா?. ஆனால், அப்போது நிதி நிர்வாகம் பற்றி நான் பெரிதாக அறிந்திருக்கவில்லை.

எனக்குத் திருமணமாகி, நான் டெல்லியில் இருந்தபோது, ​ஒரு மழலையர் பள்ளியில் உதவி ஆசிரியையாக வேலை செய்தேன். அப்போது எனக்கு மாதச்சம்பளமாக சுமார் 3,000 ரூபாய் கிடைத்தது. நான் அதை வங்கியில் சேமித்து வைத்தேன்" என்று பழைய நினைவுகளைப் பகிர்ந்தார். இச்செய்திதான் சமூக ஊடகங்களில் வேறுவிதமாகப் பரவியுள்ளது.

இதையும் படிங்க: ஜவான் விஜயகாந்த் படத்தின் காப்பியா? - மீண்டும் சர்ச்சையில் அட்லீ!

ABOUT THE AUTHOR

...view details