நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவி உடன் ஒருபடம் நடிக்கிறார்.
இதனிடையே மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்திற்கு, தமிழில் ’மாவீரன்’ என்றும் தெலுங்கில் ’மகாவீருடு’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.