தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Peter Paul: நடிகை வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் காலமானார்! - Peter Paul death

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 29, 2023, 1:35 PM IST

சென்னை: விஜய் நடித்த 'சந்திரலேகா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தனது தைரியமான கருத்துக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறுபவர். மேலும் தற்போது பல்வேறு திரைப்படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர் 19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை அதே ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் வனிதா.

ஆனால், அந்தத் திருமணமும் 2010ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே, இயக்குநர் பீட்டர் பால் என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டு மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்திற்கு பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததால் வனிதா விஜயகுமார் அவரை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை வனிதா விஜயகுமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். உணர்ச்சிமிக்க பெண்ணான என்னை பலரும் சுலபமாக ஏமாற்றி விடுகிறார்கள் என்று கண்கலங்கி பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று பீட்டர் பால்(Peter Paul) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதீத குடிப்பழக்கம் அவரது உயிரை பறித்து விட்டதாக கூறப்படுகிறது. இவரது மறைவுக்கு பீட்டர் பாலுக்கு நெருக்கமான பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:வாங்காத பொருட்களுக்கு பில்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வார்னிங்!

ABOUT THE AUTHOR

...view details