ஹைதராபாத்:தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வரும் பிரபல நடிகை தமன்னாவின் திருமணம் குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக நடிகர் விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தன. புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் காதலர் தினத்தன்று இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகப் பரவின.
இதற்கிடையில் எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமன்னா தெரிவித்தார். ஒன்றாக நடித்ததால் மட்டுமே விஜய் வர்மாவை காதலிக்கவில்லை என்றும், அவர் தனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததாகவும், அவர் தனது உலகத்தைப் புரிந்து கொண்டவர் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அருணிமா ஷர்மா இயக்கத்தில் தமன்னா நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள "ஜீ கர்தா" வெப் சீரிஸின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் திருமணம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார்.