சென்னை:நடிகை ஷீலா ராஜ்குமார் திரௌபதி, மண்டேலா, சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அருண் விஜய் நடித்த 'ஆறாது சினம்' படத்தின் மூலம் அறிமுகமான ஷீலா ராஜ்குமார். அதனை தொடர்ந்து டூ லெட் என்ற படத்தில் நடித்தார். அப்படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை அவருக்கு பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
மண்டேலா படத்தில் தபால் அதிகாரி வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர். அதனை தொடர்ந்து நல்ல கதாபாத்திரம் உள்ள வேடங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரவதம், பேட்டைக்காளி இணைய தொடர், ஜோதி, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்ஜே சூர்யாவின் காதலியாக நடித்திருந்தார்.
மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஜாதி திரைப்படம் என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது. பேட்டைக்காளி இணைய தொடரில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.