சென்னை: தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை சமந்தா. இவர் நடித்த "யசோதா" திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. சமந்தாவுக்கு அண்மையில் மயோசிடிஸ் எனப்படும் அரிய வகை தோல் நோய் ஏற்பட்டது.
யசோதா படத்திற்கான டப்பிங் பணியின்போதும் கையில் ட்ரிப்ஸ் உடன் காணப்படும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். தனது உடல்நிலை குறித்தும், ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உருக்கமாக அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.