தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சூர்யா, கார்த்தி குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை ராதிகா! - actress diwlai celebration

ராதிகா சரத்குமார், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

சூர்யா, கார்த்தி குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை ராதிகா
சூர்யா, கார்த்தி குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை ராதிகா

By

Published : Oct 24, 2022, 5:57 PM IST

நடிகர் சூர்யா, கார்த்தி குடும்பத்துடன் தனது தீபாவளியினை கொண்டாடியதாக நடிகை ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ராதிகா மருதாணி வைத்துக்கொண்ட புகைப்படம், நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் கார்த்தி, ராதிகா மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக நடனம் ஆடி தீபாவளி கொண்டாடியது போன்றவை இடம்பெற்றிருந்தன.

சூர்யா, கார்த்தி குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய நடிகை ராதிகா

”சிவகுமார் அண்ணா மற்றும் குடும்பத்தினருடனான தீபாவளி, குடும்ப ஒற்றுமை கொண்டாட்டத்தைக் கொண்டு வருகிறது” எனும் வரிகளுடன், ’தென்பாண்டி தமிழே’ எனும் பாடல் பின்னணியில் ஒலிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:கோலிவுட் முதல் பாலிவுட் வரை நடிகைகளின் தீபாவளி க்ளிக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details