ஆடி அமாவாசையை முன்னிட்டு நடிகை பிரனிதா தனது கணவருக்கு பாதபூஜை செய்து அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதையடுத்து, அதன் கீழே அதை ஆதரித்தும், விமர்சித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பிரனிதா, கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் சகுனி (2012), மாஸ் (2015) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது பதிவிட்டுள்ள பதிவு, நெட்டிசன்கள் மத்தியில் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது.