நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச்சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை நாளை மறுநாள் (டிச.4) திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பாரம்பரிய முறையில் நடைபெறவுள்ள இந்த திருமணத்தின் ஒரு நிகழ்வாக நேற்று ஹன்சிகா சோஹேல் ஜோடியின் மெஹந்தி விழா நடைபெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் இந்த திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக மண்டோடா ஃபோர்ட் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் தொடங்கிய ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் தற்போது கோட்டை வண்ண விளக்குகளால் மின்னும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. மேலும் ஹன்சிகாவின் இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்ப்பூரில் தொடங்கிய ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் இதையும் படிங்க:சில்க் பிறந்த நாள் - கேக் வெட்டி, 50 பேருக்கு புத்தாடை வழங்கிய மகா ரசிகர்