சென்னை:நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமணம் குறித்தான பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அவர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச்சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகின்ற டிசம்பர் மாதம் 4ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்யவுள்ளார்.
தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது. ஹன்சிகா மோத்வானியின் 11ஆவது வயதில் இருந்தே இரண்டு குடும்பங்களும் நண்பர்களாகப் பழகி வருகின்றனர்.
இப்போது ஹன்சிகா மற்றும் சோஹேலின் குடும்பம் நண்பர்களாக இருந்து உறவுகள் என்ற வேறொரு புதிய பயணத்தைத் தொடங்க இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு நடிகை ஹன்சிகா தன்னுடைய நடிப்புத் தொழிலை விடாமல், தொடர்ந்து நடிக்கவுள்ளார்.