தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு நடிகன் அல்லது நடிகையை ஏற்றுக்கொள்வதில் பெரும் எதிர்பார்ப்புகளை வைத்திருப்பதில்லை. ஒரு படத்தில் நடித்தவர்களும் அதன் பின் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பது வழக்கமாகும். இந்த வகையில் தமிழில் ஜிவி பிரகாஷ் மற்றும் நடிகை திவ்யபாரதி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பேச்சுலர்'. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், தற்கால இளைஞர்கள் விரும்பும் பேவரைட் படமானது. இதில் அறிமுகமான நடிகை திவ்யபாரதியை பெரும்பாலான ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கியிருந்தனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி அடிக்கடி பல புகைப்படங்களை அவரது இன்ஸ்டாவில் போடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திவ்யபாரதியின் உடல் உருவத்தை வைத்து கலாய்த்து பல மீம்ஸ்கள் வலம் வந்தன. அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாகவும் பல வதந்திகள் பரவின. இந்த கேலிகளுக்கும், விமர்சனங்களுக்கும் தற்போது திவ்யபாரதி பதிலளித்துள்ளார்.
இது குறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘இந்தப் பதிவு நிச்சயமாக எதையும் விளக்குவதற்காகவோ அல்லது நிரூபிப்பதற்காகவோ இடப்படவில்லை. ஆனால், நம்மிடம் உள்ள குறைகளோடு நம்மை நேசிப்பதை ஆதரிப்பதற்காக. சமீப நாட்களில் எனது உடல் வடிவம் போலியானது எனவும், நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் எனவும், என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்தேன் எனவும் பல போலியான பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வருகிறது. மேலும் எனக்கு "ஃபாண்டா பாட்டில் ஷேப்”, "எலும்புக்கூடு" "பெரிய பட் கேர்ள்" எனவும் பெயரிடப்படுகிறது.