தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

காதலனை கரம் பிடித்த பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத் - துருவாதித்யா பகவானி சித்ராஷி ராவத் திருமணம்

பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத் தனது காதலன் துருவாதித்யா பகவானியை திருமணம் செய்து கொண்டார்.

காதலனை கரம் பிடித்த பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத்
காதலனை கரம் பிடித்த பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத்

By

Published : Feb 4, 2023, 8:21 PM IST

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் பிரபல பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத் தனது 11 ஆண்டுகால காதலனான துருவாதித்யா பகவானியை இன்று (பிப்.4) திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பிரபல தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான சக் தே இந்தியா திரைப்படத்தில் நடத்து பிரபலமடைந்தவர் சித்ராஷி ராவத். அதன்பின் லக், பிளார் ஹோம், தேரே நள் லவ் ஹோ கயா, பிரேம் மாயீ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தேசிய அளவிலான தடகள வீராங்கனையாக இருந்து நடிகையாக பெயர் பெற்றவர். இவர் 2010ஆம் ஆண்டு முதல் துருவாதித்யா பகவானி என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தார்.

அதனடிப்படையில், பிப்.4ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 3 நாள்களாக திருமண விழா நடந்தது. அந்த வகையில் மெஹந்தி, ஹல்தி, மோதிரம் மாத்தும் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து இன்று திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு புதுமண ஜோடிகள் சிறிய அளவிலான தேரில் வலம் வந்தனர்.

அந்த நேரத்தில் ஆடியும், பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது திருமணம் குறித்து சித்ராஷி ராவத் தனது சமூக வலைதள பக்கங்களில், "திருமணத்திற்குப் பிறகும் நாங்கள் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம். இப்போது சத்தீஸ்கர் மாநிலத்தின் மருமகளாகிவிட்டேன்.

சத்தீஸ்கதியா சேபிள் பதியா'' எனப் பதிவிட்டுள்ளார். இந்த திருமணத்தின்பின்பு நடந்த வரவேற்பு விழாவில் பாலிவுட் நடிகைகள் தன்யா அப்ரோல், சுபி மேத்தா, ஷில்பா சுக்லா, ஸ்ருதி பன்வார், சீமா ஆஸ்மி, டெல்னாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:வீடியோ: ஜெய் சாலிமருக்கு வந்தடைந்த மணமகள் கியாரா அத்வானி

ABOUT THE AUTHOR

...view details